Thursday, 12 December 2019

நடைமுறை தொழில்நுட்ப இயந்திரவியல் (கோத்திணைப்பு) - அ.மி. க்ரிசீன், இ.ச. நஊமவ்

புத்தக உதவி :: நூலகம், காமராஜ் பாலிடெக்னிக் , பழவிளை.
அ.மி. க்ரிசீன், இ.ச. நஊமவ் 
நடைமுறை தொழில்நுட்ப இயந்திரவியல் (கோத்திணைப்பு) 

கௌரவ பதிப்பாசிரியர் டாக்டர் சி.ஆர்.கந்தசாமி, B. E. (Hons.), Ph. D. (Moscow) 
ருசிய மூலத்திலிருந்து தமிழாக்கம் எஸ்.எம்.காசிம் முகம்மது 
மீர் பதிப்பகம் .மாஸ்கோ 

-
விற்பனையாளர்கள்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை

அத்தியாயம் 11 

இயக்கத்தை மாற்றும் பொறியமைப்புகளின் கோத்திணைப்பு 1. திருகாணிப் பொறியமைப்புகள் 

திருகாணிப் பொறியமைப்புகளாவன சுழல் இயக்கத்தை நேர் பெயர்ச்சி இயக்கமாகவும், மிக அபூர்வமாக நேர்பெயர்ச்சி இயக்கத்தை சுழல் இயக்கமாகவும் மாற்ற உத்தேசிக்கப்பட்டவை; இரண்டாவது குறிப்பிடப்பட்டது மரைகளின் ஏற்றக் கோணம் போதுமான அளவு மிகப் பெரியதாக இருக்கும் போதும், சுயமாக நிறுத்தாத (Non Self-locking) செலுத்துகையிலும்தான் சாத்தியமாகும். இப்படிப்பட்ட பொறியமைப்புகளின் மூல உறுப்புகள் திருகாணியும், திருகும் ஆகும். 

திருகாணியின் மரைபின் ஒரு எட்டானது tமரை எனக் குறியீடு செய்யப்படுகிறது. திருகாணியின் n சுற்றுகளுக்கு, நேர்பெயர்ச்சி இயக்கம் மட்டும் உள்ள திருகு கடந்து சென்ற தூரம் 


S = n x t மரை . திருகின் பாதையாகிய S தெரிந்தால், திருகாணியின் சுற்று களின் எண்ணிக்கையாகிய 1-ஐ பின்வரும் சமன்பாட்டால் நிர்ண யித்துவிடலாம். 

S |




சுற்றுகள். 

மரை ' 




இங்கே S-ம் tமரை-ம் ஒரே நீட்டலளவை அலகுகளில் இருக்கவேண்டும். 

காட்டாக திருகின் பாதை 25 மிமீ ஆகவும், திருகாணியின் ஒரு எட்டு மரை = 10 மிமீ ஆகவும் இருந்தால், திருகாணியின் சுற்றுகளின் எண்ணிக்கை 

25 

n= tமரை 

= 2, 5 சுற்றுகள். திருகானது வழக்கமாக இரு பாதிகளாக 

பிளந்தவாறும், திருகாணியை இரு பக்கங்களிலும் அணைத்துக் கொள்ளுமாறும் தயாரிக்கப்படுகிறது. 'திருகாணிகள் தரமுள்ள எஃகிலும், திருகுகள் வார்ப்பிரும்பிலோ வெண்கலத்திலோ தயாரிக்கப் படுகின்றன. இப்படிப்பட்ட (ஜோடியின்) மூட்டின் திறப்பாட்டுக் கெழு = 0.8 முதல் 0.95-ஐ எட்டுகிறது. 



கோளத்-திருகாணிகளை உபயோகித்து இன்னும் அதிகப் பயன் பெறப்படுகிறது (படம் 166 -அ). இந்த கோளத்-திருகாணியானது கார்களின் சுக்கான் பொறியமைப்புகளில் உள்ள புழுக்கள், ராக்கட்டுகளை குறிப்படுத்தும் பொறியமைப்புகள், எந்திரக் கருவிகளின் ஒட்டும் திருகாணிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றன. கோளத்-திருகாணி (1) திருகு (4) ஆகியவற்றின் பள்ளங்கள் அச்சு வழி செதுக்கத்தில் அரைவட்ட வடிவுள்ளவை, குண்டுகளின் (2) தொடர்ச்சியான மூடப்பட்ட பாய்வு திருகின் முழு நீளத்திற்கும் வாய்க்கால்களுக்கிடைப்பட்ட சுருளி வெளியிடத்தை நிரப்புகிறது. குண்டுகள் திருகின் முழு நீளத்தையும் சென்றடைந்த பின் வளைத்து விடப்பட்ட குழாய் கால்வாயின் வழியே திருகாணி ஜோடியின் * செயல்படு மண்டலத்திற்கு அவை திரும்பி வந்துவிடுகின்றன. சாதாரண திருகாணி ஜோடியை விட, கோள-திருகாணி ஜோடியின் திறப்பாட்டுக் கெழு, மரைகளில் உராய்வு மிகக் குறைவாக இருப் பதினால் மிக உயர்வாபிருக்கும். 

கோளங்களைக் கொண்ட திருகாணி- திருகு ஜோடியிலுள்ள (படம் 166 -ஆ) இடைவெளிகளை முற்றும் அகற்ற, கோளங்களைக் கொண்ட இரு திருகுகளை (2,4) திருகாணியின் மீது அமர்த்த அவற்றிற்கிடையே பலமான வில் (3) ஒன்று குடியமர்த்தப்படுகிறது. வில்லானது திருகாணி (1), குண்டுகள், திருகுகள் ஆகியவற்றிற்கிடையே முன்-இறுக்கத்தை உண்டாக்கி செலுத்துகையில் உள்ள எல்லா இடைவெளிகளையும் அகற்றிவிடுகிறது. இப்படிப்பட்ட ஒரு ஜோடி யைத் தயாரிக்கும்போழ்து திருகிலுள்ள மரைக் கால்வாயின் புற உருவை மிக கவனமாக செயல்முறைபடுத்த வேண்டும்; இல்லை யெனில் திருகாணி ஜோடி இலகுவாக சிக்கிக் கொள்ளும்; குண்டு களில் ஒன்று நொறுங்கிவிட்டாலும் ஜோடியும் சிக்கிக் கொள்ளும். 

திருகாணிப் பொறியமைப்புகளில் இயக்கமானது . வழக்கமாக திருகாணியிலிருந்து திருகிற்குச் செலுத்தப்படுகிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக கடைசல் எந்திரக் கருவியிலுள்ள குறுக்கு நழுவியின் (தாங்கியின்) திருகாணிப் பொறியமைப்பைப் பார்ப்போம் (படம் 167-அ); இரட்டைத் திருகானது (2) திருகாணிகளால் (5) குறுக்கு நழுவியுடன் (1) கட்டப்பட்டுள்ளது. திருகாணி (6) சுழலும் போது திருகு அச்சின் வழியே நகர்ந்து குறுக்கு நழுவியை, வாகனத்தின் (7) மேல் பகுதியிலுள்ள காட்டிவழியின் வழியே நகர்த்துகிறது.342 

திருகாணியும் திருகும் வேலை செய்யும் போது அவை தே வடைந்து மரையில் இடைவெளிகள் ஏற்பட்டுவிடுகின்றன. அ விடைவெளிகளை அகற்ற ஈடுசெய்யும் அமைப்புகள் பயன்படுத்த படுகின்றன (இந்த எடுத்துக் காட்டில், திருகுகள் 2). 
படம் 166, கோளங்களைக் கொண்ட ஓட்டு திருகாணிகள்: 

அ-ஒரு திருகுடன் கூடியது, ஆ-இரு திருகுகளுடன் கூடியது. மரை தேய்ந்து இடைவெளிகள் தோன்றிவிட்டால், திருகாணியை (5) தளர்த்தி திருகாணியை (3) இறுக்க வேண்டும்; திருகாணி (3) கூம்புப் பூணாக்கியை இழுத்து இரு திருகுகளையும் அப்பால் விலக்கி மரையிலுள்ள இடைவெளியை அகற்றி விடுகிறது. 

திருகாணிப் பொறியமைப்புகளில் திருகாணியின் சுழல் இயக்க மானது அத் திருகாணியே நேராக இடம் பெயரும் இயக்கமாகவும் மாற்றப்படுகிறது; இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் திருகு அசையா மல் கட்டப்பட்டுவிடுகிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக கடைசல் எந்திரக் கருவியிலுள்ள தாங்கியின் மேல் பாகத்திலுள்ள திருகாணிப் பொறியமைப்பை (Compound Rest) பார்ப்போம் (படம் 167 -ஆ). திருகாணி (9) திருகில் (8) சுழலுகிறது; திருகு (8) தாங்கியின் திரும்பும் பாகத்தில் (வாகன கோத்திணைப்பு) உள்ள பிளவில் (15) பூட்டித் திருகாணியால் கட்டப்பட்டுள்ளது. திருகாணி (9) சுழலும் போதே நேராக இடம் பெயர ஆரம்பித்து மேல் தாங்கியின் (10) திரும்பும் பாகத்திலுள்ள காட்டிவழியின் வழியே இடப்பெயர்ச்சியடைகிறது.343 இந்த பொறியமைப்பை கோத்திணைக்கும் வரிசைக் கிரமம் பின்வருமாறு: | 

திருகை (8) அதன் இடத்தில் அமர்த்தி பூட்டித் திருகாணி மெதுவாக திருகப்படுகிறது. 

10-வது, 15-வது உறுப்புக்களை கோத்திணைத்து செருகு கட்டையைச் (16) செருகி, அமர்த்து திருகாணி முடுக்கப்படுகிறது. 

பூணை (12) திருகாணியில் (9)' இணைத்து திருகால் (14) பூட்டப்படுகிறது: பின்பு கைப்பிடி (13) திருகாணியில் அமர்த்தப் படுகிறது. 

13 

தான் 


படம் 167. கடைசல் எந்திரக் கருவியின் தாங்கி: 

அ-கீழ் பாகம்; ஆ-மேல்பாகம்.344 

பூணானது (12) தாங்கியின் (10) மேல் பாகத்தில் கச்சிதமாக அமரும் வரை திருகில் (8) திருகாணியைத் (9) திருகி, பின் பூண் (12) பூட்டித் திருகாணியால் (11) கட்டப்படுகிறது. 

கோத்திணைப்பின் தரத்தை கண்டறிய, கைப்பிடியை (13) சுழற்றும் போது, தாங்கியின் (10) மேல் பாகமானது திரும்பும் பாகத்தின் காட்டிவழியின் வழியே சிக்கலின்றி நளினமாக நகர வேண்டும்; அசைக்க முடியாமலிருக்கக் கூடாது. சிக்கினால், இதற்கு காரணம் திருகாணியிலும், திருகிலும் நெளிவுகள் இருக்கலாம். ஆட்டம் இருந்தால் மரையில் இடைவெளி இருக்கிறது, அல்லது திருகு (14) சரியாக சீரமைவு செய்யப்படவில்லை. 

2. வணரி-இணை தண்டு பொறியமைப்பின் கோத்திணைப்பு 

வணரி-இணை தண்டு பொறியமைப்பானது, நேர்பெயர்ச்சி இயக் கத்தைச் சுழல் இயக்கமாக மாற்றவும், மாறாக சுழல் இயக்கத்தை நேர்பெயர்ச்சி இயக்கமாகவும் மாற்றவும் பயன்படுத்தப்படுகிறது. 

வணரி-இணை தண்டு பொறியமைப்பின் மூல உறுப்புகளாவன: முழங்கைத் தண்டு (சில சமயங்களில் இது வணரியாலோ வணரி வட்டத் தட்டாலோ பதிலீடு செய்யப்படுகிறது), இணை தண்டு , தலைப்பெரும் தாங்கிகள், இணை தண்டுத் தாங்கிகள், பிஸ்டன் (நழுவுக் கட்டை ) முளை, கப்பி, சமனுருள். 


முழங்கைத் தண்டானது தனித்தனி பிஸ்டன்களின் வேலை யைப் பெற்று அவ் வேலையை சமனுருள் மூலமாக செலுத்து 

கைக்கு கொடுக்கிறது. 

படம் 168-ல் நான்கு சிலிண்டர் கொண்ட எஞ்சினின் 2 

முழங்கை தண்டின் கப் படம் 168. நான்கு சிலிண்டர்களைக் பரவிய ஆரவரிப்பு காட்டப் கொண்ட எஞ்சினின் முழங்கை தண்டின் பட்டுள்ளது. 

ஆரவரிப்பு முழங்கைத் தண்டு கீழ்க்காணும் மூலகங்களை கொண்டது; மெருகிடப்பட்ட நான்கு கழுத்துகள் (1); இணை தண்டுகளின் அடித் தலைகள் இவற்றுடன் இணைக்கப்படுவதால் இவை இணை தண்டு-கழுத்துகள் என அழைக்கப்படுகின்றன. 

மெருகிடப்பட்ட மூன்று கழுத்துகள் (2); இவை தலைப் பெரும் கழுத்துகள் எனப்படும் (தண்டின் ஆதாரமாகப் பணியாற்றும் தாங்கிகளில் தலைப்பெரும் கழுத்துகள் சுழல்கின்றன).345 கழுத்துகளை ஒன்றாக இணைக்கும், தண்டின் செயல்முறைப் படுத்தப்படாத பகுதிகள் (3) தண்டின் கன்னங்கள் எனப்படும். 

சமனுருளானது (4) முழங்கை தண்டின் சுழற்சியிலுள்ள சீரின் மைகளை குறைக்கவும், வணரிகளையும், பிஸ்டன்களையும், செத்தப் புள்ளிகளிலிருந்து பின்னுக்கிழுக்கவும் உத்தேசிக்கப்பட்டது. அது மட்டுமின்றி சமனுருள்-அதிக நிறையும் சடத்துவமும் பெற்றிருப் பதால்-எஞ்சினை கிளப்புவதையும், இயக்கத்தை ஆரம்பிப்பதையும் இலகுவாக்குகிறது; ஒரு சுற்றிலிருந்து அடுத்த சுற்றுக்கு கடந்து செல்லுதலை நளினமாக்குகிறது. 

இணை தண்டானது (படம் 169) முழங்கை தண்டையோ வணரி யையோ பிஸ்டன் தொகுதியுடன் கீல்மூட்டில் இணைக்கும் பணியை ஆற்றுகிறது. 

இணை தண்டின் கோத்திணைப்பானது இணை தண்டின் தலையில் பூணை அழுத்திப் பொருத்துவதுடன் ஆரம்பமாகிறது. முளைக்கு உயவிட உத்தேசிக்கப்பட்ட பள்ளம் (3) துளைக்கு (9) எதிராக அமர்ந் திருக்கும்படி பூண் பொருத்தப்படுகிறது. இப்படி பொருத்துவதானது இணை தண்டின் மேல்-தலையின் முட்டு முகப்பு வழியாக பீச்சும்போது பூணின் முட்டு முகப்பை (2) அழுத்திப் பொருத்தினால்தான் சாத்திய மாகும். பூண்களை இணைதண்டுகளின் துளைகளில் அழுத்திப் பொருத்து வதால் பூண்கள் சற்று சுருங்குகின்றன. 

அழுத்திப்பொருத்திய பின் பூண்களின் துளைகளை துப்புரவு குடைதல் செய்தோ , இழுவைக் கருவியால் இழுத்தோ , இரண்டு, மூன்று துளைச்சீர்மிகளால் சீர்செய்தோ இக்குறைபாடு நீக்கப் படுகிறது. 

படம் 169. இணைதண்டு.346 

இணை தண்டின் மேல் - தலையில் பூணை அழுத்திப்பொருத்திய பின் இணை தண்டின் கீழ்- தலையில் பூணாக்கிகள் கோத்திணைக்கப்படு கின்றன. முதலில் பூணாக்கிகளின் (4, 5) மூட்டுவாய்களின் தளங்கள் உயரத்தின் அடிப்படையில் இணையியல்புக்காக வர்ணமுறையில் சரி பார்க்கப்படுகின்றன: 

மூட்டுவாய்த் தளங்கள் இணையாக இருந்தால் இணையும் இரு பரப்புகள் முழுவதிலும் வர்ணத் தடம் காணப்படும்; மேலும் பூணாக்கி களை ஒரு மட்டப்பலகையின் மேல் வைத்து ஆட்ட முட்டுவாய்தளங்கள் சரியாக இருந்தால் ஆட்டங் கொடுக்காது. தளங்கள் இணையாக இல்லா. 


படம் 170. கோத்திணைக்கப்பட்ட இணை தண்டை சரிபார்த்தல்: அ-அக-அளவியின் காட்டியால் கூம்பியல்பிற்கும் முட்டையுரு-இயல்பிற்கும் சரிபார்த்தல், ஆ-நேர்கோட்டியல்புக்கு சரிபார்த்தல், இ-கோத்திணைக்கப்பட்ட 

இணை தண்டை இரட்டை வளைவுக்குச் சரிபார்த்தல். 




விடில் சுரண்ட வேண்டும். இணைத் தண்டின் சட்டகத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் (பூணாக்கிகளின்) பாகத்தின் பரிமாணம் கோத் திணைப்பு வரைபடத்திலோ , அதிலுள்ள அறிவுரையிலோ கொடுக்கப் பட்டிருக்கும் (வழக்கமாக அது 0.05 முதல் 0.15 மிமீ வரை இருக்கும்). பூணாக்கிகளை இணை தண்டின் தலையிலும் மூடியிலும் (6) அழுத்திப் பொருத்திய பின் அவை மரையாணிகளாலும் (10) திருகுகளாலும் (7) சேர்த்துக் கட்டப்படுகின்றன. இதற்கு முன்பே இணை தண்டின் தலைக்கும் மூடிக்கும் இடையே 0.05 மிமீ வரை தடிப்புள்ள சீரமைவு செய்யும் பித்தளை அல்லது தாமிர இடநிரப்பிகளின் (8) கணம் வைக்கப் படுகிறது. இடநிரப்பிகளின் மொத்த தடிப்பு வரைபடத்தில் கொடுக்கப் பட்டிருக்கும்; வழக்கமாக அது 4 முதல் 5 மிமீ-க்கு சமமாயிருக்கும். இணை தண்டை கோத்திணைத்த பின் இணை தண்டின் துளைகளை முட்டையுரு விற்கும் கூம்பியல்பிற்கும் அக-அளவியின் காட்டியால் சரிபார்க்கப் படுகிறது (படம் 170 -அ); அதன் பின் இணை தண்டுகளை அவற்றின் நேர்கோட்டியல்பிற்குச் சரிபார்க்கப்படுகிறது (படம் 170 -ஆ).347 இணை தண்டுகளின் நேர்கோட்டியல்பு சிறப்புத் துணை கருவியால் பின்வருமாறு சரிபார்க்கப்படுகிறது: இணை தண்டின் (2) மேல் தலையை (3) கூம்புடன் கூடிய கண்காணிப்பு முளையிலும் (4) அடித்தலையை கண்காணிப்பு பாளத்துடன் (6) கூடிய முளையிலும் (1) அமர்த்தி திருகாணியை (8) இறுக்கி முாையின் மீது அமுக்கப் படுகிறது. பின்பு கண்காணிப்பு முளையின் (4) உருளை பட்டையின் மீது பட்டசும் (அளவி 5), அதன் முளைகள் பாளத்தின் (6) தளத்தைத் தொடும்படியாக வைக்கப்படுகிறது. இணை தண்டு நேர்கோட்டியல்பு உடையதாயிருந்தால் பட்டகத்தின் (5) மூன்று முளைகளும் பாளத்தின் தளத்தை தொட்டு கொண்டிருக்கும். இணை தண்டு வளைந்திருந்தால் அது பாளத்தை அளவியின் மேல் முளையால் அல்லது மேல் முளையாலும் கீழ் இரண்டு முளைகளில் ஒன்றாலும் அல்லது கீழ் இரு முளைகளாலும் தான் தொடும். 

இணை தண்டின் வளைவு , முறுக்கு ஆகியவற்றின் பரிமாணம் இடைவெளி- அளவியால் (7) பாளத்திற்கும் முளைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை அளந்து நிர்ணயிக்கப்படுகிறது. இடைவெளி 0.05 மிமீ-ஐ விஞ்சக்கூடாது. 

இணை தண்டில், மேலே விவரிக்கப்பட்ட முறையால் கண்டு பிடிக்க முடியாத இரட்டை வளைவு இருந்தால், தண்டை பின்வரும் முறையில் சரிபார்க்க வேண்டும்; இணை தண்டானது (படம் 160-இ) கண்காணிப்பு பாளத்தின் (1) முளையால் (2) பிடித்துக் கொள்ளப்படு கிறது. இணை தண்டின் கீழ் தலையின் முட்டுமுகப்பிலுள்ள நிறுத்தி வரை வரம்பு கட்டியை (3) நகர்த்தி கீழ்த்தலை திருகாணியால் கட்டப்படுகிறது. இப்பொழுது இணை தண்டின் மேல் தலையின் முட்டுமுகப்பிற்கும் பாளத்தின் தளத்திற்கும் இடைப்பட்ட தூரம் ஆழமானியால் (4) அளவிடப்படுகிறது: பின்பு இணை தண்டை அதன் மேலுள்ள சாதனங்களுடன் 180° திருப்பி கீழ் தலையின் அடுத்தப் பக்கத்திலிருந்து வரம்புகட்டியின் முட்டுமுகப்பிலுள்ள நிறுத்தி வரை கொண்டு சென்று மறுபடியும் அளவிடப்படுகிறது (முதல் தடவை 

போலவே). 

கட்புலனாகா வெடிப்புகள் சிறப்பு அமைப்புகளால் (எக்ஸ்-கதிர் இயந்திரங்கள், கேண்மேலொளி அமைப்புகள்) கண்டுபிடிக்கப்படுகின்றன. சிற்சில வேளைகளில் சுத்தியலால் தண்டின் பல்வேறு பாகங்களில் தட்டுதல் முறையில் கண்காணிக்கப்படுகிறது; மந்தமான ஒலி கேட்டால் வெடிப்பு இருப்பதை காட்டுகிறது. 

3. பிஸ்டன் தொகுதியின் கோத்திணைப்பு உள்ளெரி எஞ்சின்கள், கொதி நீராவி எஞ்சின்கள், அமுக்கிகள், காற்றமுக்க பொறியமைப்புகள், நீர் மவியல் பொறியமைப்புகள் ஆகியவற்றிலுள்ள பிஸ்டன் தொகுதியானது பிஸ்டனின் மீது348 

செயல்படும் வாயுக்களின் அல்லது கொதி நீராவியின் அழுத்த விசைகளை முழங்கைத் தண்டிற்கு செலுத்த உத்தேசிக்கப் பட்டதாகும். 


பிஸ்டனை இணைத்தண்டுடன் பின்வருமாறு கோத்திணைக்கப் படுகிறது 

(படம் 171 - அ): பிஸ்டனிலுள்ள (2) முளைத்-துளையும் இணை தண்டின் (1) மேல்தலையும் (4) ஒன்று சேரும் வரை இணை தண்டு பிஸ்டனுக்குள் செலுத்தப்படுகிறது. பின்பு எண்ணெயால் சற்றே உயவிடப்பட்ட பிஸ்டன்-முளையானது (3) பிஸ்டனிலுள்ள துளை யில் வைத்து இலேசாக அழுத்தி உட்புகுத்தப்படுகிறது. பிஸ்டன்-முளை யில் இறுக்கம் வேண்டப்பட்டால் பிஸ்டனின் மேற்பரப்பு சூடான எண்ணெயில் (60° முதல் 70° செ) சூடுபடுத்தப்படுகிறது. பின்பு கௌவி வளையங்கள் (5) அமர்த்தப்படுகின்றன; இவை எஞ்சின் வேலை செய்யும் போது பிஸ்டன்-முளை தன் அச்சின்வழியே நகர்ந்து விடாமல் தடுத்துக் காக்கின்றன. 

பிஸ்டனில் பிஸ்டன்-வளையங்களை அணிவித்து அவை சுதந்திர நிலையிலிருக்கும் போது அவற்றின் புறவிட்டம் பிஸ்டனின் விட்டத்தை விட அதிகமாயிருக்கும். பிஸ்டனை சிலிண்டரில் அமிழ்த்தும் போது வளையங்களை நெருக்கிச் சுருக்க வேண்டும். இதற்கு அகப்பரப்பு கூம்பு 


படம் 171. பிஸ்ட ன் தலை': அ-கோத்திணைப்பு, ஆ-பிஸ்டனை எஞ்சின் சிலிண்டரில் புகுத்துவதற்கான துணைக் கருவி 

வட்டி வாயுள்ள ஓர் உருளையான துணைக் கருவி பயன்படுத்தப்படுகிறது (படம் 17/ --ஆ): இந்த துணைக் கருவியின் கூம்பு அகப் பரப்பின் குறைந்தபட்ச விட்டமானது எஞ்சின் சிலிண்டரின் விட்டத்திற்கு சமயாயிருக்கும். 

இப்படிப்பட்டத் துணைக்கருவியை சிலிண்டரின் முட்டு முகப்பில் அடர்த்தி வளையத்துடன் கூடிய பிஸ்டனை சிலிண்டருக்குள அமுக்க இந்தத்349 சாணைக்கருவி வளையங்களை நெருக்கி பிஸ்டன் சிலிண்டருக்குள் இலகுவாக நுழைய வகை செய்கிறது. 
*****************************************************************************

4. பிறழ்மையப் பொறியமைப்பு, குலீஸ் பொறியமைப்பு 

ஆகியவற்றின் கோத்திணைப்பு பிறழ்மைய பொறியமைப்பானது பல்வேறு வகைப்பட்ட வணரி-இணை தண்டு பொறியமைப்புகளில் ஒன்றாகும்; இப் பொறி யமைப்பில் முழங்கைத் தண்டின் இணை தண்டுக்- கழுத்துகள் இரு மையங்களைக் கொண்ட வட்டத் தட்டு வடிவிலிருக்கும் (படம் 172 - அ); வட்டத் தட்டின் இரு மையங்களும் ஒன்றையொன்று சார்ந்து | பரிமாணத்திற்கு இடப்பெயர்ச்சி பெறக் கூடியவை; இந்த | பரிமாணம் மையப்பிறழ்மை எனப்படும், 

பிறழ்மையப் பொறியமைப்பானது சுழல் இயக்கத்தை பின்-முன் நேர்பெயர்ச்சி இயக்கமாக மாற்ற பயன்படுகிறது. இது பெரும்பாலும் எந்திரக் கருவிகள், பதித்தல் அழுத்திகள், எந்திர எஞ்சின்களின் நழுவு வால்வுகள் பகிரும் வால்வுகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. 

பிறழ்மைய பொறியமைப்பு இரு பிறழ்மையங்களைக் கொண்ட தாகவும் இருக்கலாம் (படம் 172 -ஆ); தண்டின் மீது (1) அமர்ந்திருக் கும் அகப் பிறழ்மையமானது (2) புற பிறழ்மையத்தால் (3) சூழப்பட்டிருக்கிறது. புறப் பிறழ்மையத்தைத் திருப்பி பல்வேறு நிலைகளில் வைத்துக் கட்டிவிடலாம்; இப்படி செய்வதால் மையப் பிறழ்மை மாற்றமடைகிறது; ஆகவே நழுவியின் வீச்சின் நீளமும் மாறிவிடுகிறது. 

பிறழ்மைய பொறியமைப்பை கோத்திணைப்பதும், சீரமைவு செய்வதும் வழக்கமாக பிறழ்மையத்தை பிறழ்மைய வளைய-இறுக்கி யுடன் (2) பொருத்துவதுடன் ஆரம்பிக்கப்படுகிறது (படம் 172 -அ பார்க்கவும்). வளைய-இறுக்கியின் இரு பாதிகளின் தளங்களுக்கிடை யில் ஈடு செய்யும் இட நிரப்பி பொருளை (3) வைத்து பிறழ்மையத் திற்கும், பிறழ்மைய வளைய-இறுக்கிக்கும் இடைப்பட்ட இடை வெளியின் பரிமாணம் சீரமைவு செய்யப்படுகிறது. இடைவெளியின் பரிமாணத்தை இடைவெளி அளவியால் சரிபார்த்து பின் திருகு (4), தடைத்-திருகு இறுக்கப்படுகிறது. பொருத்தமான இடநிரப்பிகளை அமர்த்துவதால், இடத்துக்குத் தக்கவாறு உறுப்புகளை கோத் திணைக்கும் முறையைக் கையாலாமலே பொறியமைப்பை கோரப்படும் துல்லியத்திற்கு கோத்திணைக்க சாத்தியமாகிறது. வேலை செய்யும் போது வளைய-இறுக்கியின் செயல்படு பரப்புகள் தேய்ந்துவிடுகின்றன. ஆகவே . தட்டுக்கும் வளைய-இறுக்கிக்கும் இடையே வேண்டிய இடை வெளியைப் பெற இடநிரப்பி கணத்திலிருந்து சில இடநிரப்பிகள் அகற்றப் படுகின்றன, பட்டகச் சாவி (5) தண்டின் (6) காடியில் நெருக்கமாக 

- திருப்புக்கான உதிரும் 

கமாக இடன் ஆரு பாதித்து வைத்துப்பட்ட வியின் 

2 comments:

  1. Great article, I hope that you will going to post another one.

    machine vision inspeciton system manufacturers

    ReplyDelete
  2. Spin Plastic Welding Machine is suitable for automotive filters, RO water purifier filter, water jug, and Round Workpieces.
    ☎️: +91-120-4217390,4217391

    ReplyDelete